வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாக். தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டில்லி பாகிஸ்தான் தூரதகத்தில் விசா பிரிவில் பணியாற்றுகிறார். அங்கு பணியாற்றும் சிலரால் தனக்கு பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறினார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியது, பெண்ணின் புகாரை கவனமுடன் மத்திய அரசு பரிசீலித்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு பாக். வெளியுறவு செய்தி தொடர்பாளரிடம் வலியுறுத்தப்பட்டு்ள்ளது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement