தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் வடக்கு பகுதியில் சூட்கேஸ் ஒன்றில் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூட்கேஸ் அடைக்கப்பட்டு இருந்த மனித பாகங்கள்
மலேசியாவில் சுங்கை பூலோவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவரால் அதிர்ச்சியூட்டும் சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது வழிப்போக்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து துண்டிக்கப்பட்ட நபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் தெரியாத நிலையில், சம்பவ இடத்திலிருந்து காலை 11.45 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ள பொலிஸார், சூட்கேஸில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் பாகங்களை சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பியதாக துணைத் தலைவர் ஷஃபாடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கை கொலை என்று வகைப்படுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Google Maps
இதற்கிடையில் உயிரிழந்துள்ள நபர் வெளிநாட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையில் அந்த நபருக்கு கூரிய ஆயுதத்தால் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததுள்ளது.
மேலும் இந்த பிரேத பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் ஒரு ஆண் மற்றும் வெளிநாட்டவர் என்றும் அவர் ஒரு முஸ்லிம் அல்லாதவர் என்றும் நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.