புதுடெல்லி: ஒன்றிய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 15ஆண்டுகள் முடிவடைந்த வாகனங்கள் இனிமேல் புதுப்பிக்க முடியாது என்றும், இந்த புதிய விதி வரும் ஏப்ரல் 1, முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது,‘‘ 15 ஆண்டுகள் பழமையான அனைத்து அரசு வாகனங்களும் ரத்து செய்யப்படும்’’ என்றார்.