புதுடில்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரத்தில் அதன் தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங் 24 மண நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன.
இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.தவிர இந்தியாவில் உள்ள அனைத்து டபிள்யு.எப்.ஐ., அமைப்பையும் கலைத்து விட்டு, புதிய கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவ்விஷயத்தை வெளியே கொண்டு வந்ததால், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக வினேஷ் போகத் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சருடன் நடத்திய 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் பாலியல் புகார் குறித்து 72 மணி நேரத்தில் பிரிஜ்பூஷன் சிங் விளக்கம் தர வேண்டும் என மத்திய விளையாட்டுத்
துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துஉள்ளது. தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் பிரிஜ் பூஷண்சரண்சிங் பதவி விலக வேண்டும் என கெடுவிதித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement