தலாய்லாமாவின் இலங்கை பயணம் தொடர்பில் வெளியான தகவல்!


திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள
போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று
திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்று இச்செய்தியை பிரசுரித்துள்ளது.

கடந்த மாதம் பீகாரின் புத்தகாயாவில் நடைபெற்ற பௌத்த துறவிகளின் கூட்டத்தில்
கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினரால் திபெத்திய தலைவர் கொழும்புக்கு வருமாறு
வலியுறுத்தப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை

திபெத்தின் புனிதரை இலங்கை தூதுக்குழுவினர் அழைத்தனர், எனினும் அவர் தற்போது
இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த அதிகாரி
குறிப்பிட்டுள்ளார்.

தலாய்லாமாவின் இலங்கை பயணம் தொடர்பில் வெளியான தகவல்! | Dalai Lamas Visit To Sri Lanka

சீனாவின் ஆட்சேபனையை அடுத்து தலாய்லாமா இலங்கை செல்வது நல்லதா என்று
கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திபெத்தின் அதிகாரி, இந்த கேள்வியை
இலங்கை மக்களிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.

தலாய் லாமா 1959 இல் தனது தாயகத்தை விட்டு வெளியேறியதிலிருந்து இந்தியாவில்
வசித்து வருகிறார். இந்தியாவில் சுமார் 100,000 திபெத்திய
நாடுகடத்தப்பட்டவர்களும் வசித்து வருகின்றனர்.

அவர் இந்தியாவில் உள்ள தர்மசாலாவை தளமாகக் கொண்ட நாடுகடத்தப்பட்ட
அரசாங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தாலும், அவரை “பிரிவினைவாதி” என்று சீனா
அழைக்கிறது.
அத்துடன் அவரை ஆதரிக்கும் நாடுகளை எதிர்க்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.