வாரிசு OTT-யில் எப்போது வெளியாகும்? வெளியானது தகவல்!

Varisu OTT Release Date: 2023ம் ஆண்டின் தொடக்கமே விஜய் மற்றும் அஜித் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்களும் மோதிக்கொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், கொண்டாட்டத்தையும் கொடுத்தது.  ஜனவரி 11ம் தேதியன்று விஜய்யின் ‘வாரிசு’ படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுவரை ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஹவுஸ்ஃபுல்லாக இருந்து வருகின்றது.  அஜித்தின் துணிவு படத்தோடு மோதிய விஜய்யின் ‘வாரிசு’ படம் பாக்ஸ் ஆபிசில் சிறந்த முறையில் கல்லா கட்டி வருகின்றது.  இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67‘ படத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் தயாராகிவிட்டார்.  ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரே ‘தளபதி 67’ படத்தின் பூஜை தொடங்கப்பட்டு விட்டது, விரைவில் படம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகவுள்ளது.

பக்காவான குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படமாக உருவாகியுள்ள இந்த ‘வாரிசு’ படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியுள்ளது.  திரையரங்குகளில் தங்களது நடிகரின் படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் பலரும் ஓடிடியில் படம் எப்போது வெளியாகும் என்றும், எப்போது தொலைக்காட்சியில் படம் ஒளிபரப்பப்படும் என்றும் எதிர்பார்ப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.  தற்போது இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி ‘வாரிசு’ படம் வரும் பிப்ரவரி 10ம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.  அதனைத்தொடர்ந்து ‘வாரிசு’ படத்தின் தொலைக்காட்சி பிரீமிரை பொறுத்தவரையில் ஏப்ரல் 14ம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு நாளில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரித்து இருந்தார்.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, சம்யுக்தா, சங்கீதா க்ரிஷ், ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  தமன் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.