Bharat Jodo Yatra: ஜம்முவில் நுழைந்ததுமே சர்ச்சையில் சிக்கிய பாரத் ஜோடோ நடைபயணம்

Congress Bharat Jodo Yatra: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் தொடர்கிறது… பல தலைவர்களும் கலந்துக் கொண்ட பிரம்மாண்டமான நடைபயணம் செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, கடைசி கட்டமாக பதான்கோட்-பஞ்சாப் வழியாக ஜம்முவின் லக்கன்பூருக்குள் நுழைந்தது. ஜம்மு-காஷ்மீர் வந்தடைந்த மக்களை வரவேற்க தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா நேரில் வந்திருந்தார்.

இதுவரை, இந்தப் பயணம் தொடர்பாக பெரிய அளவிலான சர்ச்சைகள் இல்லாத நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நுழைந்ததுமே சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் டோக்ரா ஸ்வாபிமான் சங்கதன் கட்சியின் தலைவர் சவுத்ரி லால் சிங் இணைய முடிவு செய்ததை அடுத்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

சிறந்த உலகம்
இந்து ஏக்தா மஞ்ச் ஏற்பாடு செய்த பேரணியில் சவுத்ரி லால் சிங் பங்கேற்றதாகவும், 2018 இல் கதுவாவில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, பிடிபி-பாஜக அமைச்சரவையில் இருந்து லால் சிங் நீக்கப்பட்டார், அதோடு அவர்,பாஜகவில் இருந்தும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், சிபிஐ விசாரணையை மட்டும் தான் கோருவதாக அவர் பின்னர் தெளிவுபடுத்தியிருந்தார்.

உமர் அப்துல்லா எதிர்ப்பு 
கதுவா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் பலாத்கார குற்றவாளிகளை ஆதரித்ததாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் சவுத்ரி லால் சிங்கை ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் பங்கேற்க காங்கிரஸ் அனுமதிக்கக் கூடாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

சிலர் தங்கள் கடந்த காலத்தின் “கறைகளை” கழுவுவதற்காக யாத்திரையைப் பயன்படுத்தக்கூடும் என்பதை காங்கிரஸ் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அப்துல்லா தெரிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது.

‘பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயன்ற தலைவர்களின் பங்கை நாங்கள் மறக்கவில்லை. மக்களின் உணர்வுகளை அவர் புண்படுத்திய விதம் யாரிடமும் மறைக்கப்படவில்லை என்று கூறிய அப்துல்லா, ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் தலைவர்கள் பங்கேற்பதை அனுமதிக்க வேண்டும், இதுபோன்றவர்கள் பங்கேற்ற அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இருப்பினும், உமர் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் வந்தடைந்த பாரத் ஜோடோ யாத்திரையை வரவேற்க ஜம்மு வந்தார். 

‘நான் என் வீட்டுக்கு போகிறேன்’
செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை வியாழன் மாலை கடைசி கட்டத்தில் பதான்கோட்-பஞ்சாப் வழியாக லக்கன்பூருக்குள் நுழைந்தது.;  ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தவுடன் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் என்ன பதிவிட்டார் தெரியுமா?

‘இன்று ஜம்மு காஷ்மீர் சென்றடைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஏனென்றால் எனது மூதாதையர்களின் நினைவுகளும், காலடிதடங்களும் பொங்கிஷமாய் பொதிந்திருக்கும் எனது வீட்டிற்குச் செல்கிறேன்’.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.