சென்னை: கிண்டி கிங் மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கிண்டி கிங் மருத்துவமனையில் ரூ.230 கோடி மதிப்பில் பன்நோக்கு உயர் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், மணப்பாக்கம் ரிவர் வீவ் சாலையில் ரூ.24 லட்சம் மதிப்பில் 475 மீட்டர் நீளத்திற்கு சாலை பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.