கிண்டியில் புதிதாக கட்டப்படும் புதிய பன்நோக்கு மருத்துவமனையின் கட்டிடப் பணிகளை பார்வையிட்டார் முதலமைச்சர்

சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

6 லட்சம் சதுர அடியில் 230 கோடி ரூபாய் செலவில், 7 தளங்கள் மற்றும் 1,007 படுக்கை வசதிகளுடன் இம்மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

இதன் பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் சென்று கட்டுமான பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

அப்போது, மருத்துவமனையின் நுழைவு வாயில் தோற்றம் குறித்தும், ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்தும் திரையின் வாயிலாக அதிகாரிகள் விளக்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.