தர்மபுரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தாய் உயிரிழந்தார் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஜோதி(50). இவர்களது மகன் விக்னேஷ் (25). இந்நிலையில் ஜோதி அவரது மகன் விக்னேஷ் உடன் மோட்டார் சைக்கிளில் மாரண்டஹள்ளிக்கு சென்றார். பின்பு அங்கிருந்து இருவரும் சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது தொப்பூர் கனவாய் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் விக்னேஷ் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.