கொலஸ்ட்ரால் ஆபத்தான நோய்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக காணப்பட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கொலஸ்ட்ராலால் அபாயம் உள்ளது.
இது சில நேரங்களில் உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
இருப்பினும் இதனை ஆரம்பத்திலே கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது அவசியமாகும்.
அதற்கு இஞ்சி தண்ணீர் உதவுவதாக கூறப்படுகின்றது. இது மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.
அவ்வாறு செய்வதன் மூலம், இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
அந்தவகையில் இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
இஞ்சி தண்ணீர் செய்வது எப்படி?
- 1-2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சியை (3/4 கப்) சேர்க்கவும். குறைந்தது 20 நிமிடங்களாவது கொதிக்க விடவும், இதனால் இஞ்சியின் மருத்துவ சக்தி தண்ணீருக்குள் இறங்கும். இந்த நீரை வடிகட்டி குடிக்கவும்.
- அதில் தேன் மற்றும் எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றை கூடுதலாக சேர்க்கலாம்.
யார் இஞ்சி தண்ணீர் குடிக்கக்கூடாது?
- அதிகளவு இஞ்சியை உட்கொள்வது வயிற்று வலி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
- பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்
குறிப்பு
தினமும் சிறிதளவு இஞ்சியை எடுத்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும். இஞ்சியும் ஒரு இயற்கை வேர், எனவே இதை குடிப்பதால் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.