திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் படிப்பாதை மற்றும் யானை பாதை உள் பிரகாரம் வெளிப்பிரகாரம் பகுதிகளில் உள்ள உப சன்னதிகள் மலையின் மேல் உள்ள யாக சாலையுடன் இணைத்து சக்தி கொடுக்கும் கலாகர்சனம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள 86 உப கோவில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள நான்கு மைல்கள் மற்றும் உப கோவில்கள் மலைக்கு மேல் உள்ள உள் பிரகாரம் வெளிப்பிரகாரம் பகுதிகளில் உள்ள 18 சித்தர்கள் உள்ளிட்ட 89 சுவாமிகள் சன்னதியில் கும்பாபிஷேக புனித நீர் திருக்குடங்கள் பூஜிக்கப்பட்டு யாகசாலைக்கு கொண்டு செல்லும் நிகழ்வு நடந்து வருகிறது. அதே போல யாகசாலையுடன் அனைத்து பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் இணைத்து சக்தி கொடுக்கும் நிகழ்வு நடந்து வருகிறது இதையொட்டி அனைத்து பிரகார தெய்வங்களும் திரையிடப்பட்டு மூடப்பட்டு உள்ளது.
