போர்த்துக்கலில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் முதல் முறையாக வெள்ளை அட்டை காட்டப்பட்டது.
வெள்ளை அட்டை ஏன்?
கால்பந்து போட்டிகளில் கள நடுவர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகளை மட்டுமே காட்டுவது வழக்கம்.
ஆனால், முதல் முறையாக போர்த்துக்கலில் வெள்ளை அட்டையை காட்டும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
ஒரு வீரருக்கு அடிபட்டு வேறு வீரரை மாற்றுவது, நிறுத்தப்பட்ட நேரத்தை அதிகரிக்க இந்த அட்டை காண்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
As equipas médicas de Benfica e Sporting receberam cartão branco após assistirem uma pessoa que se sentiu mal na bancada 👏 pic.twitter.com/ihin0FAlJF
— B24 (@B24PT) January 21, 2023
பெண்கள் போட்டியில் அறிமுகம்
பெண்கள் FA கோப்பை போட்டிக்கு இணையாக கருதப்படும் Taca de போர்த்துக்கல் ஃபெமினினா போட்டியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருக்கையில் இருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து இரு அணிகளைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்களும் விரைவாக அவர்களுக்கு உதவ சென்றனர்.
@GettyImages
அப்போது தான் முதல் முறையாக நடுவர் வெள்ளை அட்டையை காட்டினார். மேலும் ரசிகர்களிடம் இருந்து அன்பான வரவேற்பை அவர் பெற்றார்.
இதற்கிடையில், நியாமான விளையாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கவும், விளையாட்டில் நெறிமுறை மதிப்பை மேம்படுத்தவும் இந்த வெள்ளை அட்டை நடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை போர்த்துக்கலின் புதிய முயற்சியின் ஒரு பகுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.