உக்ரைனுக்கான டாங்கிகள் ஏற்றுமதி…விரைவில் போலந்துக்கு ஜேர்மன் ஒப்புதல் வழங்க திட்டம்


ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட Leopard 2 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப போலந்துக்கு ஜேர்மனி வரும் வாரங்களில் ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு உதவி

 
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில்,  ரஷ்யாவின் ராணுவ தாக்குதலை சமாளித்து எதிர்ப்பு தாக்குதலை நடத்த உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து உதவி கோரி வருகிறது.

இதற்கு ஆதரவாக  பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சேலஞ்சர் 2 டாங்கிகள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்புகள் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

உக்ரைனுக்கான டாங்கிகள் ஏற்றுமதி…விரைவில் போலந்துக்கு ஜேர்மன் ஒப்புதல் வழங்க திட்டம் | German Approval Poland To Export Tanks To UkraineREUTERS

அதே போல உக்ரைனுக்கு லெக்லெர்க் டாங்கிகளை அனுப்புவதற்கான வாய்ப்பை பிரான்ஸ் மறுக்கவில்லை என்று அந்த நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மன் ஜனாதிபதி ஸ்கோல்ஸ் உடன் இணைந்து கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

இதன் மூலம் உக்ரைனுக்கான ஆயுத உதவி விரிவாக்கம் தொடர்பான சாத்தியகூறுகள் மேலும் அதிகரித்தது. 

போலந்துக்கு ஒப்புதல்

இந்நிலையில் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட Leopard 2 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பப்படுவது பற்றி போலந்துக்கு ஜேர்மன் ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் டாங்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான போலந்துக்கான ஒப்புதல் விரைவில் வர உள்ளது.  

உக்ரைனுக்கான டாங்கிகள் ஏற்றுமதி…விரைவில் போலந்துக்கு ஜேர்மன் ஒப்புதல் வழங்க திட்டம் | German Approval Poland To Export Tanks To UkraineSETC

மேலும் போலந்து போன்ற நாடுகளுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை மறு ஏற்றுமதி செய்ய ஜெர்மனி அனுமதிக்க உள்ளதாகவும் ஜெர்மன் செய்தி நிறுவனமான Spiegel தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட சிறுத்தை 2 டாங்கிகள் உக்ரைனை ஒரு பெரிய மேற்கத்திய டேங்க் படையுடன் சித்தப்படுத்தவும், வரவிருக்கும் தாக்குதல்களில் ஒரு விளிம்பை வழங்கவும் சிறந்த தேர்வாக பரவலாக கருதப்படுகிறது. 

பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த சிறுத்தை டாங்கிகளில் சிலவற்றை  உக்ரைனுக்கு அனுப்ப விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.