புலனாய்வு பிரிவின் ரகசிய அறிக்கைகளை கொலீஜியம் வெளியிடுவதா?..ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வேதனை

புதுடெல்லி: புலனாய்வு பிரிவு, ரா உளவு அமைப்பு ஆகியவற்றின் ரகசியங்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பொதுவௌியில் தெரிவிப்பது என்பது கவலை அளிப்பதாக உள்ளது என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வேதனை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜீயம் நடைமுறை விஷயத்தில் உச்சநீதிமன்றத்துக்கும், ஒன்றிய அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதனிடையே, அண்மையில் கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பற்றி புலனாய்வு பிரிவு, ரா உளவு அமைப்பு சில கருத்துகளை தெரிவித்திருந்தன.  இந்த கருத்துகள் பொதுவெளியில் வௌியிடப்பட்டன. இவற்றின் ரகசிய அறிக்கைகள் பொதுவில் வௌியானது விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில், சட்ட அமைச்சக நிகழ்வில் கலந்து கொண்ட ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “உளவு, ரா பிரிவை சேர்ந்தவர்கள் தேச நலனுக்காக ரகசியமான முறையில் பணி ஆற்றுகிறார்கள். அவர்கள் தரும் அறிக்கைகளை பொதுவௌியில் பகிரங்கப்படுத்தப்பட்டால், தேசநலனுக்காக பணி செய்வது கேள்விக்குறியாகி விடும். ரா, உளவு பிரிவின் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பகிரங்கப்படுத்தப்படுவது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.