மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பணம் கிடைக்காவிட்டால் மீண்டும் பத்து அல்லது 12 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபோன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மக்கள் நிர்க்கதிக்கு ஆளாக நேரிடும் என்றும், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
மின் கட்டணம் உயரும்
ஜனவரி மாதத்தில் மின்சார உற்பத்திக்காக 38 பில்லியன் நிலக்கரி செலவழிக்கப்பட்டதாகவும், இனி அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் பணம் இல்லை, கடன் பெற முடியாது என்பதால் மின் கட்டண உயர்வை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.