மணிப்பூரில், பா.ஜ., பிரமுகர் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தில் ஷேத்திரி பகுதியைச் சேர்ந்தவர் லைஷ்ராம் ராமேஷ்வர் சிங், ௫௦. இவர், இப்பகுதியில் பா.ஜ.,வின் மாநில முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் அமைப்பாளராக இருந்தார். இந்நிலையில், நேற்று இவர் தன் வீட்டு வாசல் முன் நின்றிருந்தபோது, பதிவு எண் இல்லாத காரில் வந்த மர்ம நபர்கள், ராமேஷ்வர் சிங்கை சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.உடனே அவரை, அப்பகுதியினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அடுத்து, காரை ஓட்டிச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரான நவோரெம் ரிக்கி பான்டிங் சிங் என்பவரை, போலீசார் கைது செய்தனர். கொலைக்கான பின்னணி தெரியவராத நிலையில், போலீசார் முக்கிய குற்றவாளியான ஆயெக்பம் கிஷோர்ஜித் என்பவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement