டெல்லி: ஆண்டுதோறும் குடியரசு நாளன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள் காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பதக்கம் பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட்ட மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும்.
சிறந்த சேவைக்கான ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த தேன்மொழி, பொன்ராமு, ரவிசேகரன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த தேன்மொழி, பொன்ராமு, ரவிசேகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் பொன்ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவிசேகரனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த 21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.