பிரித்தானியாவில் குடியரசு பிரச்சாரக் குழு, மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குடியரசு என்ற பிரச்சாரக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.
முடிசூட்டு விழா
மே மாதம் 6ஆம் திகதி மன்னர் சார்லஸிற்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் பிரித்தானியாவில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் குடியரசு என்ற பிரச்சாரக் குழு ஒன்று, மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக அந்த குழுவைச் சேர்ந்த இரண்டு நபர்கள், காலை எட்டு மணியளவில் அரச இல்லத்தின் வாயிலில் இரண்டு மீற்றர் வாக்குச்சாவடி அடையாளத்தை வெளியிட்டனர்.
@PA
அவர்கள் பக்கிங்ஹாம் அரண்மனையை வாக்குச்சாவடியாக மாற்ற முயன்றனர். இது மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களில் முதல் முறையாகும்.
பிரச்சாரக் குழுவானது மே 6ஆம் திகதிக்கு முன்பாக இதுபோன்ற பல எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக உறுதி அளித்துள்ளது. அதேபோல் அன்றைய தினம் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையும் நடத்த உள்ளது.
குடியரசு குழுவின் செய்தித் தொடர்பாளர்
இதுகுறித்து குடியரசின் செய்தித் தொடர்பாளர் கிரஹாம் ஸ்மித் கூறுகையில், ‘மன்னராட்சியின் எதிர்காலம் குறித்த வாக்கெடுப்பின் அவசியத்தை நாங்கள் வீட்டிற்கு தள்ள விரும்புகிறோம். சார்லஸ் வேண்டுமா அல்லது தேர்வு வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
சில நாட்களுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னராட்சிக்கு பொது வாக்களிக்க வேண்டும் என்ற மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
வரவிருக்கும் வாரங்களில் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் பெயரை கோரிக்கையுடன் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்தார்.
@CHRIS JACKSON/GETTY
மேலும் பேசிய அவர், ‘ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மாலை 6 மணிக்கு மக்கள் தங்கள் சொந்த வாக்குச்சாவடி பலகைகளை நாடு முழுவதும் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்ற இந்த செய்தியை வீட்டிற்குள் செலுத்த வேண்டிய நேரம் இது.
வாழ்க்கை செலவு நெருக்கடியின்போது கோடிக்கணக்கான பவுண்டுகள் வரி செலுத்துவோரின் பணத்தை செலவழிக்கும் காலாவதியான, அர்த்தமற்ற முடிசூட்டு விழா பிரித்தானிய மக்களுக்கு சேவை செய்யாது’ என கூறியுள்ளார்.
அத்துடன் அந்த பிரச்சார குழு, முடிசூட்டு விழா மூலம் வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதாக தனது மனு பக்கத்தில் கூறியுள்ளது.
@Christopher Furlong/Getty Images