ஐபிஎல் அணியை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய அதானி குழுமம்!


மகளிர் ஐபிஎல் அணியை அதானி குழுமம் 1289 கோடிக்கு வாங்கியுள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடர்

ஆடவர் கிரிக்கெட் போல் மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் முதல் மும்பையில் நடத்தப்படுகிறது.

இதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகளுக்கான ஏலம் நேற்று நடந்தது.

அதிக தொகையை குறிப்பிட்டு விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்ட அணிகள் ஒதுக்கப்பட்டன.

ஐபிஎல் அணியை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய அதானி குழுமம்! | Adani Group Bought Women Ipl Team 1289Cr

அதானி குழுமம்

அதன்படி அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை அதானி குழுமம் 1,289 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

மும்பை அணியை 912 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும், பெங்களூரு அணியை 901 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சஸ்ர்ஸ் அணி நிர்வாகமும், டெல்லி அணியை 810 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வாகமும் வாங்கின.

லக்னோ அணியை 757 கோடிக்கு கேப்ரி குளோபல் நிறுவனம் தன்வசப்படுத்தியது. ஐந்து அணிகளும் 4669.99 கோடிக்கு விற்பனை ஆகின.

ஐபிஎல் அணியை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய அதானி குழுமம்! | Adani Group Bought Women Ipl Team 1289Cr

@Twitter/@BCCIWomen

இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை முதல் 5 ஆண்டுகளுக்கு 951 கோடிக்கு வியாகாம் 18 நிறுவனம் ஏற்கனவே பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் அணியை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய அதானி குழுமம்! | Adani Group Bought Women Ipl Team 1289Cr



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.