இந்தியாவில் பெண் ஒருவர் விவாகரத்து ஆகி நான்கு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இணையத்தில் இட்ட பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சாஸ்வதி சிவா என்ற பெண்ணே இவ்வாறு தனது விவாகரத்தின் பின்னரான வாழ்க்கை குறித்த பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் இட்டுள்ளார்.
பொதுவாக திருமண பந்தத்தில் இருந்து அதனை கொண்டாடும் வகையில் ஆண்டு நிறைவு பதிவுகள் இடுவதனை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
எனினும் சாஸ்வாதி சற்றே வித்தியாசமாக விவாகரத்தான நாளை நினைவு கூர்ந்து லிங்கிடேன் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் பதிவுகளை இட்டுள்ளார்.
விவாகரத்து ஆனதன் பின்னர் தனது வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சிகளை சந்திக்க நேரிட்டது என்பதை பற்றிய விவரிப்பாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.
விவாகரத்தின் பின்னர் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்பட்டாலும் அதனை வேறு கோணத்தில் அணுகுவதன் மூலம் வெற்றி கொள்ள முடியும் என குறிப்பிடுகின்றார்.
வாழ்க்கையில் கஷ்டங்களை துன்பங்களை அனுபவித்து வரும் பலருக்கு சாஸ்வதியின் வாழ்க்கை ஓர் முன்னுதாரணமாகவே அமையப்பெறுகின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளாகவே வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சந்தர்ப்பங்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் திட்டமிடாத வகையில் பல்வேறு அழகிய முடிவுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வியாபாரம் ஒன்றை செய்து கொண்டே தனது உள ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள சிகிச்சைகளை பெற்றுக் கொண்டதாகவும் அது தமது வாழ்க்கையின் புது பாதைக்கு வலி அமைத்ததாகவும் தெரிவிக்கின்றார்.
சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையில் பிடிமானம் இல்லாத நிலை உணரப்பட்டாலும் தற்பொழுது வாழ்க்கையை புரிந்து கொண்டதாகவும் வாழ்க்கை அழகியதாக மாறி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
புதிய வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக அவர் கூறுகின்றார்.