நாட்டின் 74வது குடியரசு தின விழா: டெல்லி கடமை பாதையில் முதன் முறையாக மூவர்ண கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினமான இன்று டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், ராணுவவீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆகியோர் பங்கேற்றனர்.  

நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய பேர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் குதிரைப்படை சூழ வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வை பிரதமர் மோடி வரவேற்றார். குடியரசு தலைவருடன் வந்த எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசிவை பிதாமற் மோடி வரவேற்றார்.

பதவியேற்றபின் முதன் முறையாக திரௌபதி முர்மு மூவர்ண கோடியை ஏற்றினார். முதன் முறையாக கடமை பாதையில் குடியரசு தினவிழா நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. விஜய் சவுக் பாதையில் இருந்து கடமை பாதை வழியாக அணிவகுப்பு நடத்தப்பட்டது. கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.