டெல்லி: நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் நடைபெற்ற விமான சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ரஃபேல், மிக்-29, சு-30 உள்ளிட்ட விமானப்படை விமான சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது. விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களின் வான் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.