தேர்தலுக்கு ராசி இல்லாதவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் – முன்னாள் அமைச்சர் விமர்சனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்
திமுக
கூட்டணியில்
காங்கிரஸ்
போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு விசிக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யமும் முன் வந்து, நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதனால், தேர்தல் களத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலுக்கு ராசி இல்லாதவர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் கழக துணை பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டு மொழி போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திமுகவில் இருந்து 30க்ம் மேற்பட்டோர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியது; முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை வலுக்கட்டாயமாக தேர்தலில் நிற்க வைப்பதாகவும், இவிகேஸ் இளங்கோவன் தேர்தலுக்கு ராசி இல்லாதவர் என்றும் கூறினார்.

மேலும், தற்போது திமுகவினர் ஜனநாயகத்தை நம்பாமல் பணநாயகத்தை மட்டும் நம்பி தேர்தலில் போட்டியிடுகின்றனர். தற்போது திமுக அமைச்சர்கள் கிழக்கு ஈரோடு பகுதியில் பண பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

திமுகவுக்கு என்று ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கிறது. வன்முறை, பழி வாங்கும் எண்ணம், அவர்களுக்கு கைவந்த கலை. திமுக- வினர் ஜனநாயகத்தை நம்பவில்லை பணநாயகத்தைத் தான் நம்புகிறது. ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை கிடையாது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்தாடுகிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.