இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய
துணைத்தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இன்று (26.01.2023) நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றுள்ளது.
இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
இந்திய குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள்
இதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவருடைய சிறப்புரையை இந்தியத் துணைத் தூதுவர் வாசித்துள்ளார்.
மேலும், குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந் நிகழ்வில் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.