அமெரிக்க பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது வீட்டிற்கு பொலிஸாரை ரசிகர்களை வரவழைத்ததால் கோபமடைந்தார்.
பிரபல பாப் பாடகி
பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கினை திடீரென நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அவரது ரசிகர் படை பொலிஸாருக்கு அடுத்தடுத்து போன் செய்து, பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆபத்தில் இருப்பதாக உணர்வதாக கூறியது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் பலர் அவரது வீட்டிற்கு சென்றனர். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்பியர்ஸ் திகைத்துப் போனார்.
அவர் நலமாக இருப்பதாக அறிந்த பொலிஸார் அங்கிருந்து வெளியேறினர். இது ஸ்பியர்ஸுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
கோபமான பதிவு
இந்த நிலையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு ஸ்பியர்ஸ் ரசிகர்கள் மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவரது பதிவில்,
‘சில குறும்பு தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் பொலிஸார் என் வீட்டிற்கு அழைக்கப்பட்டனர் என்பது அனைவர்க்கும் தெரியும்.
நான் எனது ரசிகர்களை நேசிக்கிறேன், வணங்குகிறேன்.
ஆனால் இந்த முறை கொஞ்சம் மோசமாகிவிட்டது. மேலும் எனது Privacy பாதிக்கப்பட்டுவிட்டது.
என் வாழ்வில் இந்த நேரத்தில், நான் மிகவும் அக்கறை கொண்ட பொதுமக்களும் எனது ரசிகர்களும் எனது தனியுரிமையை (Privacy) மதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.