காஞ்சிபுரம் அருகே காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளம் மருத்துவர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் மதிப்புடைய பென்ஸ் காரை தீவைத்து கொளுத்தியுள்ளார்.
காஞ்சி அடுத்த ராஜகுலம் பகுதியில் குளக்கரை அருகே கார் ஒன்று தீயில் எரிவதை கண்ட மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து விட்டது.
காவல்துறை விசாரணையில் தீயில் எரிந்தது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவின் என்பவரது கார் என்றும் காஞ்சி அருகே உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் அவர், உடன் படிக்கும் காவ்யா என்ற மாணவியை காதலித்து வந்ததும் தெரிய வந்தது.
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுலம் பகுதியில் குலைக்கரை அருகே பென்ஸ் காரில் வந்த இளம் காதல் ஜோடிகள் பேசிக் கொண்டிருந்த பொழுது எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் காதலன் 70 லட்சம் மதிப்பிலான தனது சொந்த பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்தி எரித்தது தெரியவந்தது.