பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூர்வாங்க பூஜை தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக கொண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்ற வருகின்றன. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
இந்த நிலையில் பழனி முருகன் கோயிலில் இன்று நடைபெறும் கும்பாபிஷேகம் நிகழ்வை காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பழனி மலைக் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகம் விழாவை எல்.இ.டி. திரை மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதை உட்பட 3 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.