திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அனுப்பர்பாளையம்-வேலம்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பின்னலாடை நிறுவனத்தில் 100க்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வட மாநிலத் தொழிலாளர்கள் அருகிலுள்ள டீக்கடைக்கு சென்ற பொழுது அங்கு மது போதையில் இருந்த தமிழக இளைஞர்கள் சிலர் வட மாநில இளைஞர்கள் மீது சிகரெட் பற்ற வைத்து புகை ஊதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட வட மாநில தொழிலாளர்களை தமிழக இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி போதையில் இருந்த தமிழக இளைஞர்களை அடிக்க துரத்தியுள்ளனர்.
இதனால் தமிழக இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் பணிக்கு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்காததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. தாக்குதல் சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீமான் சொன்னது போல நடக்குதுடா இன்னும் கொஞ்ச நாள்ல #தமிழர்கள் வடமாநிலத்தவர்கள் கிட்ட அடிமையா இருக்க போறாங்க #திருப்பூர்
விழித்துக் கொள் தமிழா pic.twitter.com/6KN9P1gkpb
— Manikandan Mani (@Manikan97733744) January 27, 2023