இங்கிலாந்தில் உள்ள கடற்கரையில் ஆயிரம் டன் எடை கொண்ட பழங்காலப் பாறை பெயர்ந்து விழுந்தது. டோர்செட் என்ற இடத்தில் உள்ள ஜூராசிக் கடற்கரையில் பிரமாண்ட பாறை அமைந்துள்ளது.
மேற்கு விரிகுடா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பாறையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சில நிமிடங்களில் 150 அடி உயரத்திற்கு பாறை பெயர்ந்து விழுந்தது.
பாறை விழுந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாறைக்கு அடியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.