உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 பிராந்தியங்களில் 35 கட்டடங்கள் மற்றும் மின்நிலையங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா தாக்குதல் நடத்தும் முன்னதாக வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலித்ததால் கீவ் பொதுமக்கள் ஏராளமானோர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

ரஷ்யா வீசிய 55 ஏவுகணைகளில், ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்பட 47 ஏவுகணைகள் மற்றும் 24 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.