திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் வெள்ளியப்பன் என்ற 28 வயது நபர் கூலி வேலை செய்து வசித்து வருகின்றார். மும்பையில் கூலி வேலை செய்த இவர் சொந்த ஊரில் நடக்கும் கொடை விழாவுக்கு வந்துள்ளார்.
அப்போது தனது பைக்கில் அவர் பயணித்த நிலையில் ஒரு செல்போன் அழைப்பு வந்தது. எனவே அவர் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வந்த மர்ம கும்பல் அவரை சூழ்ந்து அறிவாளால் தலையில் வெட்டி இருக்கின்றனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெள்ளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் வெள்ளியப்பனுக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை இரு மாதங்களுக்கு முன் மும்பைக்கு வெள்ளியப்பன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அந்த பெண்ணின் உறவினர்களுக்கும் வெள்ளியப்பனுக்கும் முன் விரோதம் ஏற்பட அதன் காரணமாகத்தான் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.