பெங்களூருவில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா கண்காட்சியின் போது 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அசைவப் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏரோ இந்தியா கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில், யெலஹங்கா விமானப்படை நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் எல்லைக்குள் அசைவ உணவுகளை பரிமாறவும், விற்கவும் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை இந்தத் தடை விதிக்கப்படுவதாகவும், இந்தக் காலகட்டத்தில் இறைச்சி, மீன் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இறைச்சியைத் தேடி பறவைகள் வந்தால் கண்காட்சியில் இடையூறு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.