உத்தரப் பிரதேச மாநிலம் ஹுசைங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிசாபூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரகிஷோர் லோதி. இவருக்கு 3 வயதில் ராஜ் என்ற மகன் உள்ளான். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது மகனை கோடரியால் வெட்டியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு, சந்திரகிஷோர் லோதி குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் தனது மகன் ராஜை கோடரியால் வெட்டி, பின்னர் உடலை விவசாய வயலில் புதைத்தார் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு வீர் சிங் கூறினார்.
இதையடுத்து இது தொடர்பாக சந்திரகிஷோரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், லோதி நேற்று கைது செய்யப்பட்டார் மற்றும் அவர் அளித்த தகவலின் உதவியுடன் 3 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டது, சிங் கூறினார்.
பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.