கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில், “செனிஷோ” புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
இந்திய பெருங்கடலில் உருவான செனிஷோ புயல் வலுவடைந்து ஜனவரி 19-அன்று மடகாஸ்கரில் கரையை கடந்தது. தொடர்ந்து, அங்கு சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கனமழையால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயலால் 13 ஆயிரம் வீடுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்தன.
வெள்ளத்தில் சிக்கி மாயமான 17 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.