ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சம்பந்தப்பட்ட வாக்குசாவடிநிலை அலுவலர்களிடம் 12 டி படிவத்தை பூர்த்தி செய்து 31ம் தேதி முதல் 4-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் தகுந்த அரசு சான்றிதழ் நகலையும், கோவிட் தொற்று உள்ளவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழையும் இணைக்க அறிவுறுத்தி உள்ளனர்.
தபால் ஓட்டு கோரி பெறப்படும் படிவங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி சரிபார்த்து தபால் ஓட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்வார் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.