திருமணத்திற்காக மணக்கோலத்தில் காத்திருந்த மணமகள்: திறக்க மறுத்த தேவாலயத்தின் கதவுகள்! வீடியோ


பிலிப்பைன்ஸில் மணமகள் ஒருவர் திருமணத்திற்காக தேவாலயத்திற்குள் செல்ல முயன்ற போது கதவுகள் நெரிசலில் சிக்கி கொண்டு திறக்காமல் தாமதப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ
 

2022ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் உள்ள மஸ்பேட் நகரில் ஆகஸ்ட் 16ம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணை சற்று பீதியடைய வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Ghie Anne Marie Cioco என அடையாளம் காணப்பட்ட மணமகள் திருமண நிகழ்விற்காக தேவாலயத்தின் உள்ளே செல்ல தயாரானார்.

ஆனால் தேவாலயத்தின் கதவுகள் நெரிசலில் சிக்கி கொண்டு சிறிது நேரம் திறக்க முடியாமல் போனதால் மணமகள் Ghie Anne Marie Cioco சற்று பதற்றத்துடன் கதவுகளின் இடையில் செல்ல தயாரானார்.

நல்லவேளையாக ஒருங்கிணைப்பாளர்கள் அங்கிருந்ததால் அதைத் திறக்க தங்களால் இயன்றதைச் செய்தார்கள். கிட்டத்தட்ட 20 வினாடிகள் போராட்டத்திற்கு பிறகு கதவுகள் திறக்கப்பட்டன.

இந்த வீடியோ காட்சிகளில் தேவாலயத்தின் இடம் அழகாகவும், பழமையானதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமான திருமணம் 

இந்த திருமணத்தின் வீடியோகிராஃபர் Zye Lee வழங்கிய தகவலில், திருமணம் நடைபெறுவதை விரும்பாதது போல் கதவு திறக்க மறுத்தது வேடிக்கையாக இருந்தது. 

திருமணத்திற்காக மணக்கோலத்தில் காத்திருந்த மணமகள்: திறக்க மறுத்த தேவாலயத்தின் கதவுகள்! வீடியோ | Jammed Doors Of Church Delays Brides Philippines

இருப்பினும் திருமணத்தின் போது எல்லாம் சரியாக நடந்தது, இது ஒரு வெற்றிகரமான திருமணம் என்று தெரிவித்தார். 

அத்துடன் திருமணத்தில் அனைவரும் வேடிக்கையாக இருந்தனர் மற்றும் அவர்களின் சிறப்பு நிகழ்வை அனுபவித்தனர் என்றும்  வீடியோகிராஃபர் Zye Lee குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.