பரத்பூர்: ராஜஸ்தானில், இந்திய விமானப்படையின் சுகோய் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏற்பட்ட விபத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சுகோய், மிராஜ் 2000 ராணுவ ஜெட் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக இராணுவ வட்டாரங்களும் உறுதிபடுத்தின. ஜெட் விமானத்தின் சிதைவுகளும், விமானம் எரியும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின்றனா.
விபத்து தொடர்பான செய்தியை பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் உறுதிப்படுத்தினார். அதன்பிறக்கு, ராணுவத்தின் ஜெட் விமான விபத்து குறித்து, பாதுகாப்பு வட்டாரங்களும் உறுதிப்படுத்தின.
ராஜஸ்தான் விமான விபத்து
விபத்து நடைபெற்ற இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் தெரிவித்தார். இந்த விமானம் உச்சைன் காவல் நிலையப் பகுதியில் உள்ள பிங்கோரா ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
#WATCH | Rajasthan, Bharatpur | Wreckage of jet seen. Earlier report as confirmed by Bharatpur District Collector Alok Ranjan said charter jet, however, defence sources confirm IAF jets have crashed in the vicinity. Therefore, more details awaited. pic.twitter.com/005oPmUp6Z
— ANI (@ANI) January 28, 2023
சாலைகள் கரடுமுரடாக இருப்பதால் மீட்புப் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும், நிவாரண வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது தீப்பிடித்ததாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். தீ விபத்து ஏற்பட்டு நீண்ட நேரத்துக்குப் பிறகு விமானம் தரையில் விழுந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, மத்திய பிரதேசத்தின் மொரேனா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ராணுவ ஜெட் விமானங்களும் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது.