டெல்லி: மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமிஷா உள்ளிட்டோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். புதுடெல்லி, மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன் என மோடி கூறியுள்ளார்.
அவர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது, மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவோம் என்று மோடி கூறியுள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.