சேலம்: சேலத்தில் முதல் முறையாக சர்வதேச பூனை கண்காட்சியில் 20 வகையிலான 200கும் மேற்பட்ட அறிய வகை பூனைகள் பங்கேற்றன. சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது செல்ல பிராணியான பூனைகளுடன் பங்கேற்றனர். குறிப்பாக நாட்டு பூனை வகைகள் பெங்கால் டைகர், பெர்சியன் லாங் ஹேர், ஏக்சாய்டிக் வெரைட்டி, சியா மிஸ், நைஜீரியன் கேட் உள்ளிட்ட 20 வகையான சுமார் 200 கும் மேற்பட்ட பூனைகள் இடம்பெற்றன.
சேலத்தில் முதல் முறையாக நடைபெற்ற இந்த பூனை கண்காட்சியினை பொதுமக்கள் வியப்போடு கண்டு ரசித்தனர். மேலும் இதில் பங்குபெற்ற பூனைகளின் தரம், வளர்ப்பு, பராமரிப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு பெஸ்ட் ஆப் பெஸ்ட் என்று சொல்லக்கூடிய சிறந்த பூனைகளுக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசுகளும், கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கண்காட்சியில் ரூ.5,000 முதல் ரூ.5,00,000 வரையில் பூனைகள் ரகத்திற்கேற்ற விற்பனையாகின குறிப்பாக பெங்காலி பூனை ரூ.1,00,000 மேல் விற்பனையானதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.