மனைவியை அனைவரும் மன்னித்துவிடுங்கள்…3 குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவரின் கணவர் உருக்கம்


அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மனைவியை அனைவரும் மன்னித்து விடுங்கள் என கணவன் கோரிக்கை வைத்துள்ளார்.

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள டக்ஸ்பரியில் மூன்று குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை அவரது கணவர் மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி 25ம் திகதியான புதன்கிழமை மனைவி லிண்ட்சே அவருடைய ஐந்து வயது மகள் கோரா மற்றும் மூன்று வயது மகன் டாசன் ஆகியோரை கொலை செய்ததாகவும், தனது எட்டு மாத மகன் காலனைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

மனைவியை அனைவரும் மன்னித்துவிடுங்கள்…3 குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவரின் கணவர் உருக்கம் | Us Wife Accused Of Murdering Their 3 ChildrenFacebook / Lindsay Marie Clancy

மேலும் குழந்தைகளை மூச்சு திணற வைத்து விட்டு, தானும் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள மனைவி லிண்ட்சே முயற்சித்துள்ளார்.

இதற்கிடையில் வீட்டில் உணவை எடுக்க வந்த கணவர் பேட்ரிக் க்ளான்சி குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இரண்டு மூத்த குழந்தைகள் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக உடனடியாக அறிவிக்கப்பட்டனர், அவர்களின் இறப்புக்கான காரணங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவர்களின் கழுத்து நெரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மனைவியை அனைவரும் மன்னித்துவிடுங்கள்…3 குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவரின் கணவர் உருக்கம் | Us Wife Accused Of Murdering Their 3 ChildrenFacebook / Lindsay Marie Clancy

அதே நேரத்தில் காலன் பாஸ்டன் என்ற குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஜனவரி 27ம் திகதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.


மனைவியை மன்னித்து விடுங்கள்

இந்நிலையில் ஜனவரி 27ம் திகதி ஆன்லைன் நிதி திரட்டலில் எழுதிய கணவர் பேட்ரிக் க்ளான்சி, மூன்று குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட தனது மனைவியை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் என்னைப் போலவே லிண்ட்சேயை நீங்கள் அனைவரும் மன்னிக்க வேண்டும் என்று நான் கேட்க விரும்புகிறேன் என எழுதியுள்ளார்.

மனைவியை அனைவரும் மன்னித்துவிடுங்கள்…3 குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவரின் கணவர் உருக்கம் | Us Wife Accused Of Murdering Their 3 ChildrenFacebook / Lindsay Marie Clancy

உண்மையாகவே லிண்ட்சே, என்னிடம், எங்களது குழந்தைகளிடம், நண்பர்களிடம் என அனைவரிடமும் தாராளமாக அன்பாகவும் அக்கறையுடனும் இருந்தார்.

எங்களின் திருமணம் அற்புதமாக இருந்தது, ஆனால் அவளது உடல்நிலை வேகமாக மோசமடைந்து வளர்ந்தது. நான் இப்போது அவளுக்காக விரும்புவது அவள் எப்படியாவது அமைதியைக் காண வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.