Thalapathy 67: விஜய் விஷயத்துல நான் பண்ண ஒரே தப்பு இதுதான்..ஓப்பனாக பேசிய SAC ..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதியாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் விஜய்யின் வாரிசு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படம் வெளியான முதல் வாரத்தில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வசூலிலும் பின்தங்கி இருந்தது வாரிசு.

அதன் பிறகு குடும்பம் குடும்பமாக வாரிசு படத்தை காண ரசிகர்கள் படையெடுத்தனர். அதன் காரணமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது வாரிசு திரைப்படம். இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்த விஜய் வாரிசு படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

Thalapathy 67: தளபதி 67 ப்ரோமோவை பார்த்து ஷாக்காகிட்டேன்..பிரபல நடிகர் ஓபன் டாக்..!

இந்நிலையில் இப்படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார். மாஸ்டர் படத்திற்க்கு பிறகு லோகேஷ் மற்றும் விஜய் மீண்டும் தளபதி 67 படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதையடுத்து விஜய்யின் படத்தை தயாரிக்கவும் இயக்கவும் பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.

அந்த அளவிற்கு அவரின் நட்சத்திர அந்தஸ்து நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கின்றது. இந்நிலையில் விஜய் இந்தளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு மிகமுக்கிய காரணம் அவரின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான்.

விஜய்யை ஒரு ஹீரோவாக ரசிகர்களின் மனதில் பதிய செய்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் தற்போது மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதை பலமுறை எஸ்.ஏ.சந்திரசேகரே வெளிப்படையாக கூறியுள்ளார். இதையடுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்க்கும் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியுள்ளது என்னவென்றால், விஜய்யின் விஷயத்தில் நான் செய்த ஒரே தவறு அவரை இன்னமும் நான் குழந்தையாக நினைத்தது தான். அவ்வாறு நினைத்து ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி சொல்லி செய்ய வைத்தது விஜய்க்கு சில சமயங்களில் பிடிக்காமல் போயிருக்கலாம் என நினைக்கின்றேன் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.