திமுக ஆட்சியில் பலன் பெறாத மக்களே இல்லை; அதற்கான அங்கீகாரம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கிடைக்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து பழனிசாமி தரப்பு தாக்கம் செய்த முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை தவிர்த்து பிற கட்சிகள் தேர்தல் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. ஈரோடு கிழக்கில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரோடு திருநகர் காலனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக ஆட்சியில் பலன் பெறாத மக்களே இல்லை என்பதால், இடைத்தேர்தலில் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றார். அதிமுக ஆட்சியில் நடைமுறைகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.