Vaathi: தனுஷின் வாத்தியும், செல்வராகவனின் பகாசூரன் படமும் ஒரே நாளில் ரிலீஸாகவிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
குருதன் அண்ணன் செல்வராகவனை குருவாக பார்க்கிறார் தனுஷ். அய்யோ, எங்க அண்ணன் இயக்கத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம். கண் சிமிட்டுவதை கூட கவனிப்பார். அதிகமாக சிமிட்டிவிட்டாய், ரீ டேக் போகலாம் என்பார். அவரை திருப்தி படுத்துவது கடினம் என்று தனுஷ் பலமுறை கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட செல்வராகவன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். நடிப்புனா சொல்லவே வேண்டாம், அசத்திக் கொண்டிருக்கிறார்.
பகாசூரன்மோகன் ஜி. இயக்கியிருக்கும் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன். வித்தியாசமான படங்களை எடுப்பதற்கு பெயர் போன மோகன், செல்வராகவனை எப்படி இயக்கியிருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் பகாசூரன் படம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் பகாசூரன் தனியாக வரவில்லை.
வாத்திவெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படமும் பிப்ரவரி 17ம் தேதி தான் ரிலீஸாக உள்ளது. தெலுங்கு இயக்குநரின் படத்தில் தனுஷ் நடித்திருப்பதால் வாத்தி மீதான எதிர்பார்ப்பு பயங்கரமாக இருக்கிறது. வாத்தி படத்தில் நடித்து வந்தபோது தான் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth: எந்த இயக்குநருக்கு ரஜினி போன் போட்டிருக்கார்னு பாருங்க: இவரு லிஸ்ட்லயே இல்லயே
மோதல்செல்வராகவன், தனுஷ் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகவிருப்பது இதுவே முதல் முறை ஆகும். கெரியர் என்று வந்துவிட்டால் அண்ணன், தம்பி எல்லாம் பார்க்க முடியாது, படத்திற்கு ஏற்ற தேதியை தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். வாத்தி முன்கூட்டியே ரிலீஸாக வேண்டியது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போய் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கிறது.
நானே வருவேன்தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கியிருந்த அந்த படத்தில் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியிருந்தார் தனுஷ். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கு முந்தைய நாள் ரிலீஸான நானே வருவேன் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் போனது. சினிமா ரசிகர்கள் பொன்னியின் செல்வனை கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.
கேப்டன் மில்லர்தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். தனுஷின் அண்ணனாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார். அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படப்பிடிப்பு பாதியில் நின்றதாக அண்மையில் வதந்தி பரவி அடங்கியது.