திருப்பூரில் தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக கூறி அண்மையில் வீடியோ வைரலான விவகாரம்
திருப்பூர் சம்பவம் – 2 வடமாநிலத்தவர்கள் கைது
பீகாரைச் சேர்ந்த 2 பேர் 3 பிரிவுகளில் கைது
வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக துரத்தி தாக்கிய காட்சிகள் அடங்கிய வீடியோ விவகாரத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது
திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் 14.01.2023 அன்று நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ வைரல்
திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த ரஜத்குமார், பரேஷ்ராம் என்பவரை, திருப்பூர் மாநகர போலீசார் இன்று கைது செய்துள்ளனர்
சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
திருப்பூர் மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்கள் சிலரையும் போலீசார் தேடி வருவதாக தகவல்
அண்மையில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது