அஜித்தின் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கான காரணத்தை அம்பலப்படுத்தியுள்ளார் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி.
துணிவு திரைப்படம்தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் வளர்ந்து இன்று உச்ச நடிகராக தனக்கான இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களுடன் வசூலையும் வாரிக் குவித்தது. துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்குள்ளேயே அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு வெளியானது. Anchor DD: டிடிக்கு தொழில் அதிபருடன் ரெண்டாவது கல்யாணமா? உண்மமையை உடைத்த அக்கா!
ஏகே 62 அதன்படி அஜித்தின் 62 வது படத்தை பிரபல இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதோடு இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாகவும் அரவிந்த் சாமி வில்லனாகவும், சந்தானம் நகைச்சுவை காபப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. Sonia Agarwal: எத்தனை நாட்கள் தனியாக இருப்பது? மறுமணம் குறித்து பேசிய தனுஷின் மாஜி அண்ணி!
நயன்தாரா பேசியும்..இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் கூறிய கதையில் திருப்தியடையாத அஜித்தும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷனும் கதையை மாற்றுமாறு கூறியதாகவும் ஆனால் விக்னேஷ் சிவன் எந்த மாற்றமும் செய்யாததால் படத்தில் இருந்து அவரை நீக்கியதாகவும் தகவல் வெளியானது. நயன்தாரா இந்த விஷயத்தில் தலையிட்டப் போதும் லைகா மற்றும் அஜித் தரப்பு உடன்படவில்லை என கூறப்பட்டது. ஸ்டைலிஷ் தமிழச்சி ஸ்ருதிஹாசன் பத்தி இதெல்லாம் தெரியுமா?
பிஸ்மி தகவல்இந்நிலையில் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். அதன்படி, விக்னேஷ் சிவன் கூறிய கதை பிடிக்காததால் சில மாற்றங்களை செய்யுமாறு அஜித்தும் லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனமும் விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். மேலும் கதையை மாற்ற 8 மாத அவகாசமும் கொடுத்துள்ளனர். ஆனால் விக்னேஷ் சிவன் கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் , 8 மாதங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார். Dancer Ramesh Death: ‘அந்த பொம்பள அடிச்சு கொடுமைப் படுத்தியிருக்கு.. தள்ளிவிட்டு கொன்னுடுச்சு’.. குடும்பத்தினர் கதறல்!
தடம் இயக்குநர்?இதையடுத்தே விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட காரணம் என தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் பிஸ்மி. இதனிடையே அஜித்தின் ஏகே 62 படத்தை தடம் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஏகே62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #JusticeForVigneshSivan என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Dancer Ramesh Death: ‘அவதான் என் புருஷனைக் கொன்னுட்டா’… டான்ஸர் ரமேஷ் மனைவி பகீர்!
Ak 62 Ajith