பிரான்சைத் தொடர்ந்து பின்வாங்கும் ஜேர்மனி?: புடினுடைய கோபத்தால் எடுத்துள்ள முடிவு…


உக்ரைன் போர் விவகாரம் மற்ற நாடுகளுக்கும் பிரச்சினையைக் கொண்டுவரும்போலிருக்கிறது.

உக்ரைனுக்கு உதவும் நாடுகள் மீது புடின் கோபம்

ரஷ்ய உக்ரைன் போரில், பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளன. அதன்படி, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க இருப்பதாக ஜேர்மனி, அமெரிக்கா முதலான நாடுகள் தெரிவித்திருந்தன.

ஜேர்மனி தனது தயாரிப்பான Leopard 2 என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது.


ஆனால், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது ரஷ்ய ஜனாதிபதி புடின் கோபம் கொண்டுள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை, நேரடியாக போரில் தலையிடுவதாகத்தான் ரஷ்யா எடுத்துக்கொள்வதாக கிரெம்ளின் வட்டாரமும் தெரிவித்துள்ளது.

பின்வாங்கும் ஜேர்மனி

இந்நிலையில், Leopard 2 என்னும் போர் வாகனங்களைத் தொடர்ந்து ஜேர்மனி உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க இருப்பதாக செய்திகள் உலாவருகின்றன.

பிரான்சைத் தொடர்ந்து பின்வாங்கும் ஜேர்மனி?: புடினுடைய கோபத்தால் எடுத்துள்ள முடிவு... | Germany Retreating After France

ஆனால், ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ் அதை மறுத்துள்ளார். ஜேர்மன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், நாம் உக்ரைனுக்கு Leopard 2 என்னும் போர் வாகனங்களை வழங்கத்தான் முடிவு செய்துள்ளோம். மற்றபடி ஜேர்மனியில் உலவும் செய்திகள் அர்த்தமற்றவை என்றார்.

ஏற்கனவே, எங்களுக்கு ரஷ்யாவுடன் போர் இல்லை என்று பிரான்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.