ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், ஸ்ரீநகரில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை எனும் பெயரில் யாத்திரையை கடந்தாண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார். பல்வேறு மாநிலங்களில் 75 மாவட்டங்கள் வழியாக பயணம் மேற்கொண்ட அவர், ஜம்மு-காஷ்மீருக்கு சென்றுள்ளார்.
இன்று நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயண நிறைவு விழாவில் காங்கிரஸ் சார்பில் 23 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக சில தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
திமுக உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.