நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், கூடுதலால்க தீவிரவாதம் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் குண்டுவெடிப்பு பகுதியில் உள்ள போலீஸ் லைன் பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மசூதியில் தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு ஃபிதாயீன் தாக்குதல் என்று நம்பப்படுகிறது. செய்தி நிறுவனமான AFP வெளியிட்டுள்ள செய்தியில், தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கூறியுள்ளது. அப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அதன் அருகே ராணுவப் பிரிவு அலுவலகமும் உள்ளது. குண்டுவெடிப்புக்குப் பிறகு தூசி மற்றும் புகை மேகம் காணப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கத் தொடங்கியது.
மேலும் படிக்க | காஷ்மீர் பிரச்சனையை மறப்பது தான் நல்லது… பாகிஸ்தானை அறிவுறுத்தும் UAE!
குறிப்பிடத்தக்க வகையில், தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP) என்ற அமைப்புக்கு பாகிஸ்தானின் இந்த பகுதியில் அதிக செல்வாக்கு உள்ளது, கடந்த காலங்களில், இந்த அமைப்பு இங்கு தாக்குதல் நடத்துவதாகவும் அச்சுறுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள சில வீடியோக்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதைக் காணலாம். நிதி நெருக்கடியிலும் , உணவு பொருள் பற்றாக்குறையிலும் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிற்கு திவீரவாதமும் தற்போது குடைச்சலை கொடுத்து வருகிறது.
நகரின் லேடி ரீடிங் மருத்துவமனையின் (LRC) செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிம் கூறுகையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். பாகிஸ்தான் செய்தித்தாள் டானிடம் அசீம் கூறுகையில், அந்த பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், ஆம்புலன்ஸ்கள் மட்டுமே அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன என்றும் கூறினார். இது தவிர சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் காவல் துறையினர் கூறினர்.
மேலும் படிக்க | உணவில்லாமல் வாடும் மக்கள்! ஆடம்பரமாய் வாழும் நவாப்கள்! பாகிஸ்தானின் அவல நிலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ