காஞ்சிபுரத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்மணி, திடீரென மகனுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்றார்.
கைம்பெண்ணான லட்சுமி, மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது மகனை பனையூரிலுள்ள தனியார் விடுதியில் இலவசமாக தங்க வைத்துள்ளார்.
அங்கு அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விடுதி நிர்வாகிகள் அவரை அழைத்து சென்றுவிடுமாறு லட்சுமியிடம் கூறியுள்ளனர்.
மகனை மீண்டும் விடுதியில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்குமாறு ஆட்சியரிடம் மணு கொடுக்க வந்த லட்சுமி, திடீரென மண்னெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
பின், ஆட்சியரின் பரிந்துரையின்பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு உறைவிட பள்ளியில் இளைஞர் சேர்க்கப்பட்டார்.